மூன்று கண்டங்களை தாண்டி சைக்கிள் பயணத்திலேயே தேனிலவை கொண்டாடிய தம்பதி!!

317

பிரிட்டனை சேர்ந்த தம்பதியர் ஒருவர் தங்களது தேன்நிலவிற்காக 20,000 மைல்கள் பயணம் செய்து சாதனை படைத்துள்ளனர்.

பிரித்தானியாவின் பிளேமவுத் மாகாணத்தை சேர்ந்த தம்பதி கேட்(32)- ஸ்டிவ் டர்னர்(34). இவர்கள் தங்களது தேனிலவு பயணித்தை கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நியூசிலாந்தில் தொடங்கி சுமார் இரண்டு வருடங்களாய் தொடர்ந்து பயணம் செய்து நேற்று முன்தினம்(மார்ச் 16ம் திகதி) பயணத்தை முடித்துள்ளனர்.

மூன்று கண்டங்களை தாண்டிய இவ்விருவரும் 2,50,000 மீற்றர் மிதிவண்டியிலேயே பயணித்ததுடன், சதுப்பு நிலக்காடுகளையும், பாலைவனங்களையும் கடந்துள்ளனர். மேலும் இப்பாதைகளை கடந்து செல்கையில் இயற்கை சீற்றங்களை சந்தித்துள்ளனர்.

கம்போடியா, அவுஸ்திரேலியா, மலேசியா, இந்தோனேஷியா, பிரான்ஸ் உள்ளிட்ட 18 நாடுகளை கடந்து சென்றுள்ளனர்.

இவரது மனைவி கேட் அவுஸ்திரேலியாவில் பயணித்து கொண்டிருக்கையில், அவரது முழங்கால் முட்டியில் முறிவு ஏற்பட்டுள்ளது.

எனினும் பயணத்தை நிறுத்தாது சிகிச்சை மேற்கொண்டு சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இவர்களது சாதனை எவரெஸ்ட் பனிமலையை 28 முறை ஏறுவதற்கு சமமாக கருதப்படுகிறது.

B1 B2 B3