ஹெடிவத்தை பிரதேசத்தில் மூன்று பஸ்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்து : 16 பேர் காயம்

811

ஹபராதுவ பொலிஸ் பிரிவின் ஹெடிவத்தை பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற பஸ் விபத்தில் 16 பேர் காயமடைந்துள்ளனர்.

மூன்று பஸ்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஊழியர்களை ஏற்றிச் சென்ற தனியார் பஸ் ஒன்றுடன், பின்னால் வந்த பயணிகள் பஸ்ஸொன்று மோதியுள்ளது.

இதனால் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் முன்னாள் சென்ற மற்றுமாரு பயணிகள் பஸ்ஸூடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.



விபத்தில் காயமடைந்தவர்கள் கராப்பிட்டிய மற்றும் ஹபராதுவ கலுகல கிராமிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய பயணிகள் பஸ் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.