ஜி8 நாடுகளின் பட்டியலில் இருந்து ரஷ்யா நீக்கம் : புதின் கடும் கண்டனம்!!

325

Rasia

சக்தி வாய்ந்த ஜி8 நாடுகள் பட்டியலில் இருந்து ரஷ்யா நீக்கப்பட்டுள்ளது குறித்து அந்நாட்டின் ஜனாதிபதி விளாடிமின் புதிர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலைக்கும், கிரீமியா பகுதியில் நிலவும் குழப்பத்துக்கும் ரஷ்யா தான் காரணமென்று தெரிவித்துள்ள பிரான்ஸ் வெளியுறவுத்துறை மந்திரியான லாரெண்ட் பாபியஸ், அந்நாட்டை ஜி8 நாடுகள் பட்டியிலிலிருந்து நீக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே யூன் மாதத்தில் ரஷ்யாவில் உள்ள சோச்சியில் நடைபெறுவதாக இருந்த ஜி8 மாநாட்டை மேற்கத்திய நாடுகள் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், மேற்கத்திய நாடுகள் தங்களை ஏமாற்றி விட்டதாகவும் உக்ரைன் விவகாரத்தில் அந்த நாடுகள் எல்லை மீறி நடந்து கொண்டதாகவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.