தடுப்பூசிகளுக்கான முற்பதிவு தொடர்பில் பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!!

1062

வாட்ஸ்அப் செயலி ஊடாக தடுப்பூசிக்காக மக்களை பதிவு செய்வதற்கான எந்தவொரு நடைமுறையும் சுகாதார அமைச்சிடம் இல்லை என்று சுகாதார சேவைகள் துணை பணிப்பாளர் கலாநிதி ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

எனவே பொதுமக்கள் வாட்ஸ்அப் அல்லது எஸ்.எம்.எஸ் செய்திகளை பதிவுளுக்காக பயன்டுத்த வேண்டாம் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சுகாதார ஊக்குவிப்பு பணியகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தடுப்பூசிக்காக பதிவு செய்யுமாறு மக்களைக் கோரி சுகாதார அமைச்சகம் எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சில நிறுவனங்கள் இதுபோன்ற பதிவு நடைமுறைகளை ஆரம்பித்துள்ளதாகவும் ,எனினும் இது தொடர்பில் அந்த நிறுவனங்கள் சுகாதார அமைச்சகத்திற்கு அறிவிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்காக அந்தந்த பகுதிகளில் உள்ள சுகாதார மருத்துவ அதிகாரியுடன் தொடர்புகொள்ளுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தடுப்பூசி இயக்கத்தில் அரசியல்வாதிகளின் தலையீடு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், மக்கள் பிரதிநிதிகள் சுகாதார ஊழியர்களின் கடமைகளை சீர்குலைப்பது வருந்தத்தக்கது என்று குறிப்பிட்டார்.

இது ஒரு முன்மாதிரி அல்ல. சமூகத் தலைவர்கள் இந்த பணியில் சுகாதார ஊழியர்களுக்கு இடையூறு விளைவிக்காமல் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

-தமிழ்வின்-