கனடாவில் சைக்கிளில் வெளியே சென்ற இலங்கையருக்காக காத்திருந்த குடும்பம் : நேர்ந்த துயரம்!!

5994


கனடாவில்…



கனடாவில் சைக்கிளில் வெளியே சென்ற இலங்கையர் ஒருவர் வீட்டுக்குத் திரும்பாத நிலையில், அவர் மணல் முதலான கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் செல்லும் ட்ரக் மோதி உயிரிழந்தார் என்ற துயர செய்தி அறிந்து அவரது குடும்பத்தினர் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.



தெகிவளையில் பிறந்தவரான Dillan Fernando (49), இலங்கையிலிருந்து தன் குடும்பத்தை கனடாவுக்கு ஸ்பான்சர் செய்து அழைத்து வந்தவர் ஆவார். அவர்கள் அனைவரையும் Dillanதான் கவனித்தும் வந்தார்.




அப்போது, அவசரமாக சென்ற ஆம்புலன்ஸ் முதலான வாகனங்களுக்கு வழி விடுவதற்காக மற்ற வாகனங்கள் ஓரமாக ஒதுங்கி நின்றிருக்கின்றன. அவை சென்றதும் மீண்டும் போக்குவரத்து நகரத் தொடங்கியுள்ளது.


அப்போது எதிர்பாராதவிதமாக, மணல் போன்ற பொருட்களை கொண்டு செல்லும் ட்ரக் ஒன்றின் பின் புறம் Dillanஇன் சைக்கிளில் மோத, அவர் கீழே விழுந்திருக்கிறார்.

விழுந்தவர் மீண்டும் எழவேயில்லை. மாலை 3 மணியளவில் Dillan வீடு திரும்புவார் என அவரது குடும்பத்தார் காத்திருக்க, அவர்களுக்கு Dillan விபத்தில் இறந்துவிட்டார் என்ற செய்திதான் கிடைத்திருக்கிறது.


தனது சகோதரி முதல் குடும்பத்தினர் அனைவரையும் கவனித்துக்கொண்ட Dillan, தன் பெற்றோருக்காக வீடு ஒன்றையும் வாங்கிக் கொடுத்திருக்கிறாராம்.

அவர் எங்களுக்காக நிறைய தியாகம் செய்திருக்கிறார் என்று கூறும் Dillanஇன் சகோதரி, அவர் அனைவரையும் நன்றாக கவனித்துக்கொண்டதாக தெரிவிக்கிறார். அவரது உயிர் விலையேறப்பெற்றது என்று கூறும் Dillanஇன் சகோதரர், இப்படி ஒரு அர்த்தமற்ற மரணம் இன்னொருவருக்கு வரக்கூடாது என்கிறார்.

Dillanஇன் எதிர்பாரா மரணத்தால் அவரது குடும்பம் துயரத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், அந்த விபத்து தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளார்கள்.