நாட்டை தொடர்ந்தும் முடக்குவது குறித்து தீர்மானிக்கவில்லை : இராணுவத் தளபதி!!

2146


இராணுவத் தளபதி..


எதிர்வரும் ஜூன் மாதம் 7ம் திகதியின் பின்னர் நாட்டை தொடர்ந்தும் முடக்குவது குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.கோவிட்-19 நோய்த் தொற்று காவுகையை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த 21ம் திகதி முதல் நாடு தழுவிய அடிப்படையில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டிருந்தது.


இந்த பயணத்தடை எதிர்வரும் ஜூன் மாதம் 7ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் பின்னரும் நாட்டில் பயணத்தடையை நீடிப்பதா இல்லையா என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.


பயணத் தடை தொடர்பில் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். எனினும், பயணத் தடையை நீடிப்பதா இல்லையா என்பது குறித்து ஜனாதிபதி தலைமையிலான சுகாதார தரப்பினரினாலேயே தீர்மானம் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-