இலங்கை மக்களுக்கு இன்று முதல் 5000 ரூபாய் கொடுப்பனவு!!

12738

5000 ரூபாய் கொடுப்பனவு..

நாட்டில் நிலவும் கொவிட் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசாங்கத்தினால் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

கொவிட் நிலைமை மற்றும் பயணத்தடையை கருத்திற் கொண்டு மிகவும் சுகாதார பாதுகாப்புடன் இந்த பணத்தை பகிரும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அதற்கமைய இம்முறை 5ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்கி நிறைவு செய்வதற்கு ஒன்றரை அல்லது இரண்டு வாரங்களாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை மக்களை ஒரு இடத்திற்கு அழைத்து இந்த பணத்தை வழங்க முடியாத நிலைமை உள்ளது. இதனால் சுகாதார வழிக்காட்டலின் கீழ் இதனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீங்கள் இதனை பெற தகுதியுள்ளவர் என்றால் எவ்வித சந்தேகமும் வேண்டாம் பணம் உங்களை வந்து சேரும். சமுர்த்தி அதிகாரிகள் மற்றும் கிராம உத்தியோத்தர்கள் குழுவாக இணைந்து வருமானம் பெற முடியாமல் இருக்கும் குடும்பங்களுக்கு இந்த பணத்தை வழங்குவார் என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.