பிச்சை எடுத்து 6 கோடி சேர்த்த 100 வயது மூதாட்டி!!

966

beggingசவுதி அரேபியாவில் ஜிட்டா பகுதியில் வசித்த இசா என்ற 100 வயது மூதாட்டி தனது வீட்டு குளியல் அறையில் தவறி விழுந்து பரிதாபமாக உயிர் இழந்தார்.

கண்பார்வை இழந்து, உடல் நலிந்த தோற்றத்துடன் காணப்பட்ட இவர் தனது வாழ்நாளில் பாதி காலத்தை (சுமார் 50 ஆண்டுகள்) வீதிகளில் கையில் பாத்திரம் ஏந்தி பிச்சை எடுத்தவர் ஆவார்.

இவரது மறைவு பக்கத்து வீட்டுக்காரர்களை சோகத்தில் ஆழ்த்தினாலும், பெரிய அதிர்ச்சிக்குள்ளாகி மவுனியாக காணப்பட்டனர். அதற்கு காரணம், மூதாட்டி இசா 4 வீடுகளுக்கு சொந்தக்காரர்.

அதுமட்டுமல்ல ஏராளமாக நகைகள், தங்க நாணயங்கள் வாங்கி குவித்து வைத்திருக்கிறார்.

இவரின் மொத்த சொத்துக்களின் மதிப்பு 6 கோடியாகும். இவை அனைத்தும் அவர் தனது தாய், சகோதரி சகிதமாக பிச்சை எடுத்து சேர்த்தவை ஆகும்.