அகதிகளை திருப்பியனுப்பும் ஜேர்மனி!!

423

Germany

ஜேர்மனியில் குடியேறும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால், கடந்தாண்டில் மட்டும் அதிகளவான மக்கள் சொந்த நாட்டிற்கே திருப்பியனுப்பட்டுள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜேர்மனி, பொருளாதாரத்தில் சிறந்து விளங்குவதால் அதிகளவான மக்கள் தஞ்சம் கோரி வருகின்றனர். எனவே அகதிகள் மற்றும் விசா கோருவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இதனை கட்டுப்படுத்த கடந்தாண்டில் மட்டும் 10, 200 பேர் சொந்த நாட்டிற்கு திரும்பி அனுப்பப்பட்டுள்ளனர், இவர்கள் அனைவரும் பால்கன் நாட்டை சேர்ந்தவர்கள். கடந்த 2012ம் ஆண்டுடன் ஒப்பிட்டுகையில், இந்த எண்ணிக்கை அதிகமாகும்.

இந்நிலையில் கடந்த வாரம், இனிவரும் காலங்களில் பால்கன் நாடுகளிலிருந்து வரும் அகதிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்படும் என ஜேர்மன் அரசாங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.