அமெரிக்காவில் கார்கள் மீது வீழ்ந்த ஹெலிகாப்டரால் பரபரப்பு : 2 பேர் பலி!!

336

USAஅமெரிக்காவின் வாஷிங்டனில் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் ஹெலிகாப்டர் நேற்று முன்தினம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.

தொலைக்காட்சி நிறுவனத்தின் மொட்டை மாடியில் உள்ள தளத்தில் இருந்து புறப்பட்ட அந்த ஹெலிகாப்டர், மேலெழும்பும்போது திடீரென நிலைதடுமாறி கட்டிடத்தின் ஒரு பகுதியில் இடிப்பதுபோல் சென்றது. பின்னர் கீழ் நோக்கி பாய்ந்த அந்த ஹெலிகாப்டர், தரையில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மீது விழுந்து தீப்பிடித்தது.

இந்தச் சம்பவத்தில் இருவர் ஸ்தலத்திலேயே மரணமடைந்தனர்.
ஒரு காரில் இருந்தவர், ஹெலிகாப்டர் விழுவதை பார்த்ததும் உடனடியாக காரைத் திறந்து வெளியேறினார். இருப்பினும் பலத்த காயமடைந்த அவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஹெலிகாப்டரும், கார்களும் தீப்பிடித்து எரிந்ததால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் அங்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.