20 கிலோ எடையுள்ள 8 மாத குழந்தை!!

316

Baby

கொலம்பியாவை சேர்ந்தவர் யுனைஸ் ஃபேண்டினோ என்ற பெண்மணியின் 8 மாத குழந்தையான சாண்டியாகோ மெண்டோசா அதிக எடையுடன் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சாண்டியாகோ மெண்டோசாவுக்கு நாளுக்கு நாள் எடை அதிகரிப்பதாக ஷப்பி ஹார்ட்ஸ் என்ற நெஞ்சக மருத்துவமனைக்கு அவர் கடிதம் எழுதியிருந்தார்.

இவரது கடிதத்தை கண்ட மருத்துவமனை இயக்குனரான சால்வடார் பாலேசியோ கோன்சாலேஸ் போகாட்டாவிலுள்ள தங்களது மருத்துவமனையில் அக்குழந்தையை சேர்த்து சிகிச்சை அளித்து வருகிறார்.

இந்தநிலையில் குழந்தை எப்பொழுது அழுதாலும் உடனடியாக பாலூட்டியதாலே அவன் இவ்வளவு குண்டானதாக ஃபேண்டினோ தெரிவித்தார்.

தற்போது அவனது உடல் எடையை குறைக்க அறுவை சிகிச்சை செய்ய மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

எடை குறைக்கப்படாவிட்டால் வருங்காலங்களில் அக்குழந்தைக்கு இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி மற்றும் மூட்டு வலி ஏற்பட வாய்ப்பிருப்பதாக இயக்குனர் கோன்சாலேஸ் மேலும் தெரிவித்தார். ஆனால் அவன் குணமடைவதற்கு நீண்ட காலம் பிடிக்கும் என தெரிகிறது.