கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமையில் இருப்பவர்கள் காப்பாற்ற தமிழன் கண்டுபிடித்த அலாரம்!!

534

முகமத் சாகுல் அமீது…

கொரோனாவால் பாதிக்கப்பட்டு, தனிமையில் இருக்கும் முதியவர்களை காப்பாற்ற தமிழக இளைஞன் ஒருவர் அலாரம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். தமிழகத்தின், விழுப்புரத்தைச் சேர்ந்தவர் முகமத் சாகுல் அமீது. 24 வயதான இவர் வேலையின்றி வீட்டில் இருந்து வருகிறார்.

இந்நிலையில், இந்த கொரோனா காலகட்டத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக ஏராளமானோர் உ.யிரிழப்பதைக் கண்ட இவர், இதற்கு எதாவது செய்ய வேண்டும் என்று ஆக்சிஜன் அலர்ட் சேப்டி டிவைஸ் ஒன்றை ஸ்மார்ட் வாட்ச் வடிவில் கண்டுபிடித்துள்ளார்.

குறித்த சாதனத்தில் சிம்கார்டு ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. கையில் வாட்ச் கட்டுவதைப்போல, இந்த சாதனத்தை அணிந்து கொள்ள வேண்டும். அப்படி அணிந்து கொள்பவருக்கு, அவருடைய உடலில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருந்தால் தெரிய வரும்.

அதாவது, ஆக்சிஜன் அலர்ட் சேப்டி டிவைஸில் பொருத்தப்பட்டுள்ள சிம் கார்டில், அவசர அழைப்புக்கு யாருடைய எண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதோ, அந்த எண்களுக்கு முதலில் மெசேஜ் போகும்.

அடுத்து கால் போகும். அதன்பிறகு அவர்களுடைய செல் வைப்ரேட் ஆகும். இதையடுத்து சம்பந்தப்பட்ட நபருக்கு உடலில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பது தெரிந்து, அவரை உடனடியாக காப்பாற்ற முடியும்.

கொரோனா காரணமாக தனியாக இருக்கும் முதியவர்களுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்படும் போது அவர்களால் உதவிக்கு எவரையும் அழைக்க முடியாத நிலையில் இ.றந்துவிடுகிறார்கள்.

இதனை தடுக்கும் வகையிலும் வயதானவர்களின் உ.யிரை பா.துகாக்கும் நோக்கத்திலும் இந்த சாதனம் கண்டுபிடிக்கப்பட்டதாக சாகுல் அமீது கூறியுள்ளார்.

இந்த சாதனத்திற்கு 2 ஆயிரம் ரூபாயை விலையாக நிர்ணயித்துள்ள முஹமத் சாகுல் அமீத்தை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர். இணையவாசிகள் பலரும் அவரை வாழ்த்தியும், தங்கள் பாராட்டையும் தெரிவித்து வருகின்றனர்.