நரகத்தில் இருந்து வந்த கோழி : புதிய வகை டைனோசர்!!

381

Dinosorus

6 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் வாழ்ந்த புதிய வகை டைனோசரின் படிமங்களை அமெரிக்க ஆய்வியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

வட அமெரிக்காவின் மத்திய மேற்கு பகுதியில் உள்ள டக்கோட்டாவில் பாறைப் படிமங்களை தொல்லியலாளர்கள் ஆய்வு செய்தபோது இந்த அரிய வகை டைனோசர் கிடைத்துள்ளது.

முதலை மற்றும் ஈமு கோழிக்கு நிகரான உடலமைப்பை கொண்ட இது, ஒன்றரை மீட்டர் உயரம் மற்றும் சுமார் 200 கிலோ எடை கொண்டதாக உள்ளது. மேசபோட்டேமியாவின் இதிகாசங்களில் பேய்ப் பறவை என இவ்வகை உயிரினங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அறிவியல் ரீதியாக அன்சு என்றழைக்கப்படும் இந்த டைனோசர் கூரிய மூக்கு மற்றும் இறகு கொண்டதாக மட்டும் காணப்படுகிறது. இதர டைனோசர் வகைகளுக்கு உள்ளது போன்ற பற்களோ, நகங்களோ இதற்கு இல்லை.

டைனோசர்களில் ‘ஓவிரப்டோரோசர்ஸ்’ என்று அறியப்படும் இவ்வகை உயிரினங்கள் ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு மாபெரும் விண்கல் பூமியை தாக்குவதற்கு முற்பட்ட காலகட்டத்தில் பூமியில் வாழ்ந்திருக்கக் கூடும் என்று தொல்லியலாளர்கள் கருதுகின்றனர்.

தற்போது கிடைத்துள்ள இந்த புதுவகை டைனோசரின் உடல் அமைப்பை வைத்து ‘நரகத்தில் இருந்து வந்த கோழி’ (Chicken From Hell) என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளது.