நண்பரின் வீட்டில் கைவரிசையை காட்டிய பிரபல நடிகைகள் கைது!!

3135


மகாராஷ்டிரா..கொரோனா ஊரடங்கால் பணக்கஷ்டம் ஏற்பட, நண்பரின் வீட்டில் திருட முயன்று 2 நடிகைகள் தற்போது போலீசாரிடம் சிக்கியுள்ளனர். மகாராஷ்டிராவின் மும்பை கோரேகான் கிழக்கு அரே போலீசாரே இரண்டு நடிகைகளை கைது செய்துள்ளனர்.இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பிரபல நடிகைகளான சுராபி சுரேந்திர லால் ஸ்ரீவஸ்தவா (25) மற்றும் மொசினா முக்தர் ஷேக் (19) ஆகியோர் தங்களுடைய நண்பர் வீட்டுக்கு சென்றுள்ளனர்.
அங்கே சில நாட்கள் தங்கியிருந்து, கடந்த மாதம் 18ம் தேதி நண்பரின் வீட்டிலிருந்து 3 லட்சத்து 28 ஆயிரம் ரூபாயை திருடியுள்ளனர். பின்னர் எதுவும் தெரியாதது போல் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.


பணம் திருடு போனது தெரிந்ததும் குறித்த நபர் போலீசிடம் புகார் அளித்தார். இதன்பின்னர் சிசிடிவி காட்சிகளை பார்த்த போது, நடிகைகள் இருவரும் பணத்தை ஒரு பையில் வைத்து எடுத்து சென்றது தெரியவந்தது.

தற்போது இருவரையும் கைது செய்ததுடன், அவர்களிடமிருந்து 60,000 ரூபாயை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.


மேலும் அவர்களிடம் நடத்திய வி.சாரணையில், ஊரடங்கால் கடும் கஷ்டத்தை சந்தித்ததால் நண்பரின் வீட்டில் திருடியதாக தெரிவித்துள்ளனர்.