கடன் அட்டை மோசடியில் ஈடுபட்ட இலங்கையர்கள் இந்தியாவில் கைது..!

538

arrestகடன் அட்டை மோசடியுடன் தொடர்புடைய மூன்று இலங்கையர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

15 லட்சம் ரூபா மோசடியுடன் தொடர்புடைய இவர்கள் மூவரும் சென்னை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலையைச் சேர்ந்த ஜயதரன் தம்பிபிள்ளை (28), நவனீதராஜா (37) மற்றும் பிரதீப் குமார் 28) ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் சிவனேசன் பார்த்தீபன் என்ற நபர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்