பங்களாதேஷில் இந்துக் கோயில்களை சேதப்படுத்தியவர்கள் கைது..!

774

arrestபங்களாதேஷில் இந்து குடும்பங்களுக்கு சொந்தமான நூற்றாண்டு பழமைவாய்ந்த கோயில்கள் இடிக்கப்பட்டதுடன் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளன.

பங்களாதேஷ் பாகர்கட் மாவட்டத்தில் உள்ள இந்து கோவிலில் உள்ள துர்க்கை, கணபதி,லட்சுமி, சரஸ்வதி சிலைகளை மர்மநபர்கள் சேதப்படுத்தியதுடன் கோவிலுக்கும் தீவைத்தனர்.

இது குறித்து மாவட்ட பொலிஸ் அதிகாரி மொகத் நிஜாமுல் ஹக் கூறுகையில் சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். மற்றொரு சம்பவமாக தசரத்ராய் என்பவருக்கு சொந்தமான கோயில் ஒன்றும் இடிக்கப்பட்டது.

இது குறித்து அவர் கூறுகையில் வங்கதேச தேசிய கட்சி தொண்டர்கள் அரசியல் காரணங்களுக்காக இதனை செய்துள்ளனர் என கூறினார்.