கூட்டுப் பாலியல் குற்றச்சாட்டு: குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை..!

637

rapeமும்பையில் உள்ள சக்தி மில்ஸ் வளாகத்தில் டெலிபோன் ஆபரேட்டராக பணிபுரிந்த 18 வயது பெண்ணை பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து, மும்பை – மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மத்திய மும்பையில் உள்ள பாழடைந்த சக்தி மில்ஸ் வளாகத்தில் 2013-ம் ஆண்டு ஜூலை மாதம், 5 பேர் கொண்ட கும்பல் (இதில் 3 பேர் பெண் பத்திரிகையாளர் வழக்கில் தொடர்புடையவர்கள்) பாலியல் பலாத்காரம் செய்தனர்.

இந்த வழக்கில் விஜய் ஜாதவ், காசிம் பெங்காலி, சலிம் அன்சாரி, அஸ்பாக் ஷேக் மற்றும் ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டனர்.

அதே வளாகத்தில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22-ம் திகதி செய்தி சேகரிப்பதற்காக மத்திய மும்பையில் உள்ள பாழடைந்த சக்தி மில்ஸ் வளாகத்துக்கு சக ஆண் ஊழியர் ஒருவருடன் 22 வயது பெண் பத்திரிகையாளர் ஒருவர் சென்றார். ஆண் ஊழியரை தாக்கிய 5 பேர் கொண்ட கும்பல், பெண் பத்திரிகையாளரை பாலியல் பலாத்காரம் செய்தது. இந்த வழக்கில் விஜய் ஜாதவ், காசிம் பெங்காலி, சலிம் அன்சாரி, சிராஜ் ரெஹ்மான் மற்றும் ஒரு சிறுவனும் கைது செய்யப்பட்டனர்.

இந்த இரு வழக்குகளிலும் குற்றம் சாட்டப்பட்டுள்ள 2 சிறுவர்கள் மீதான விசாரணை, சிறுவர் நீதிமன்றத்தில் தனியாக நடைபெற்று வருகிறது. மற்ற 5 பேர் மீதான வழக்கு விசாரணை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்றது. அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 5 பேரையும் குற்றவாளிகள் என்று நீதிபதி ஷாலினி பன்சால்கர் ஜோஷி அறிவித்தார்.