வவுனியாவில் தேசிய சோபாக்கியா வாரத்தை முன்னிட்டு சமூர்த்தி பயனாளிக்கு வீடு கையளிப்பும் அடிக்கல் நாட்டும்!!

2187

சோபாக்கியா வாரம்..

தேசிய சோபாக்கியா வாரத்தை முன்னிட்டு மரக்காரம்பளை கிராத்தில் உற்பத்தி கிராம கட்டிடத்தின் அடிக்கல் நாட்டுவிழாவும் பூவரசங்குளம் பகுதியில் வீடு கையளிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வவுனியா அபிவிருத்தி குழு இணைத்தலைவருமாகிய குலசிங்கம் திலீபன் அவர்களும் சிறப்பு விருந்தினராக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துல சேன அவர்களும்,

கௌரவ விருந்தினர்களாக வவுனியா தெற்கு தமிழ் பிரதே சபை தவிசாளர், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர், கிராம அலுவலர்,

அபிவிருத்தி உத்தியோகத்தர், பட்டதாரி பயிலுனர்கள், திட்ட பயனாளிகள், பொது மக்கள் என பலர் கொவிட் பாதுகாப்பு நடைமுறைகளுடன், சமூக இடைவெளி பேணி கலந்து கொண்டனர்.

வீடு கையளிப்பு வைபவத்தில் பிரதம மற்றும் சிறப்பு விருந்தினர்கள் நாடா வெட்டி திறந்து வைத்ததுடன் அடிக்கல் நாட்டு வைபவத்தினையும் ஆரம்பித்து வைத்தனர்.