நிர்வாண கோலத்தில் சுற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு கடும் எச்சரிக்கை !!

574

பெருவில் நிர்வாணமாக சுற்றித்திரியும் சுற்றுலா பயணிகளுக்கு அந்நாட்டு அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பெருவின் உரும்பா மாகாணத்தில் உள்ள கஸ்கோ பகுதியில் மச்சு பிச்சு அமைந்துள்ளது. கடந்த 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்டு, சுமார் 7,7970 அடி உயரத்தில் மலையுச்சியில் இருக்கும் இந்த மச்சு பிச்சுவை உலகின் பராம்பரிய சின்னமாக யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.

சுற்றுத்தலமான இவ்விடத்தை பார்வையிட உலகின் பல்வேறு பகுதியிலிருந்து குவியும் சுற்றுலா பயணிகள் இதற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நிர்வாணமாக சுற்றுகின்றனர்.

மேலும் பாரம்பரியச் சின்னத்தின் முன்பு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு அவற்றை இணையதளத்தில் வெளியிடுகின்றனர்.

இவர்களது இச்செயல் அந்நாட்டிற்கும் மச்சு பிச்சுவிற்கும் இழிவை ஏற்படுத்துவதாக இருப்பதால் சமீபத்தில் அங்கு நிர்வாணமாக சுற்றி திரிந்த 4 அமெரிக்கர்கள், 2 கனேடியர்கள் மற்றும் 2 அவுஸ்திரேலியர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதனைதொடர்ந்து மச்சு பிச்சுவிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு சில கட்டுப்பாடுகளையும், நடைமுறைகளையும் விதித்தது மட்டுமல்லாமல் நிர்வாணமாக சுற்றி திரிபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பெரு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

N1 N2