எகிப்தில் 529 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!!

719

Egypt

எகிப்தில் பொலிசாரை படுகொலை செய்தது மற்றும் தாக்குதல் நடத்தியது தொடர்பான வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மோர்சியின் ஆதரவாளர்கள் 529 பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது.

எகிப்து தலைநகர் கெய்ரோவில் கடந்த ஒகஸ்ட் மாதம் முன்னாள் ஜனாதிபதி மோர்சியின் ஆதரவாளர்கள் பெரும் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டம் வன்முறையில் வெடித்தது. இதில் பொலிசார் உட்பட நூற்றுக்கணக்கானோர் பலியாகினர்.

இது தொடர்பாக பொலிசார் ஆயிரக்கணக்கான மோர்சி ஆதரவாளர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.

எகிப்தின் மின்யா நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில் 529 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. 16 பேர் மட்டும் விடுவிக்கப்பட்டனர்.

ஒரே வழக்கில் 529 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருப்பது எகிப்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.