யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் இளஞனின் சடலம் மீட்பு!!

586

hangயாழ். திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

திருநெல்வேலி பாரதிபுரத்தை சேர்ந்த சண்முகலிங்கம் மனோகரன் (25) என்னும் இளைஞனே அவரது வீட்டில் உள்ள அறை ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இளைஞனின் தற்கொலைக்கான காரணம் தெரியாத நிலையில், மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.