காப்பாற்றுங்கள் என கத்தினார்கள் : நள்ளிரவில் நடிகை யாஷிகாவின் கார் விபத்தில் சிக்கியதை நேரில் பார்த்தவர்கள்!!

1481


யாஷிகா ஆனந்த்..நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்துக்குள்ளான நிலையில் காரில் பயணித்த சிலர் ம.து போ.தையில் இருந்ததாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.மாமல்லபுரம் அடுத்த சூளேரிக்காடு பகுதி கிழக்குக் கடற்கரைச் சாலையில் இன்று நள்ளிரவு ஒரு மணியளவில் வேகமாக வந்த சொகுசு கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, தடுப்புச் சுவரின்மீது மோதியது.
அதனால் அந்தக் கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காரில் பயணித்தவர்கள், காப்பாற்றுங்கள் என கத்தினார்கள். அதைக்கேட்டு குளேரிக்காடு பகுதி மக்களும் அவ்வழியாக சாலையில் சென்றவர்களும் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.


அப்போதுதான் விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடுவது நடிகை யாஷிகா ஆனந்த் எனப் பொதுமக்களுக்கு தெரியவந்தது. உடனடியாக மாமல்லபுரம் போக்குவரத்துப் பிரிவு காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்ததோடு விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பொது மக்கள் கொண்டு சென்றனர்.

அப்போது காரில் பயணித்த பெண் ஒருவர் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவரின் சடலத்தை மீட்ட பொலிசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


விசாரணையில் விபத்தில் உயிரிழந்தது நடிகை யாஷிகா ஆனந்த்தின் தோழியான ஹைதராபாத்தைச் சேர்ந்த இன்ஜினீயர் வள்ளிச்செட்டி பவாணி (28) எனத் தெரியவந்தது.

மேல்சிகிச்சைக்காக நடிகை யாஷிகா ஆனந்த், அவரின் இரண்டு ஆண் நண்பர்கள் என மூன்று பேரை சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பொலிசார் கொண்டு சென்றனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தை நேரில் பார்த்தவர்கள், காரில் பயணித்த சிலர் ம.து போ.தையில் இருந்ததாக அதிர்ச்சி தகவலை கூறியுள்ளனர்.

ஆனால் இதை பொலிசார் இன்னும் உறுதிப்படுத்தாத நிலையில் விசாரணை முடிவில்தான் ம.து அ.ருந்தினார்களா என்ற தகவல் தெரியவரும்.

விபத்தை ஏற்படுத்திய நடிகை யாஷிகா ஆனந்த் மீது இந்திய தண்டணைச் சட்டப்பிரிவுகள் 279-337-304 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்திருக்கிறோம். இதில் 304 சட்டப்பிரிவுக்கு 10 ஆண்டுகள் அல்லது ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படலாம் என தெரியவந்துள்ளது.