விமானம் கடலில் தானாக மூழ்கவில்லை : வேண்டும் என்றே மூழ்கடிக்கப்பட்டது : சர்ச்சையைக் கிளப்பிய இங்கிலாந்து பத்திரிக்கை!!

385

Missing-Malaysia-Airlines-plane

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி, 239 பயணிகளுடன் பறந்த மலேசிய விமானம், கடந்த 8ம் திகதி அதிகாலையில் தெற்கு சீனக்கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்த போது மாயமானது.

இந்த மாயமான விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கியதாக தற்போது கூறப்பட்டுள்ளது. கடலுக்குள் விழுந்த விமானத் தில் இருந்து தொடர்ந்து சமிக்ஞைகள் (சிக்னல்) வந்து கொண்டிருப்பதாக இங்கிலாந்தின் இன்மர்சாட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த விமானம் கடலில் மூழ்கியது விபத்து அல்ல ஒரு தற்கொலைச் செயல் வேண்டும் என்றே நிகழ்த்தப்பட்டது என இங்கிலாந்து செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் டெய்லி டெலிகிராப் என்ற செய்தித்தாள் காணாமல் போன மலேசிய விமானம் குறித்து மலேசிய அதிகாரிகள் அளித்த அறிக்கைகள் முரண்பாடாக உள்ளது. விமானி குறித்த விசாரனையை திசை திருப்புகிறது.

தற்போது இயந்திர கோளாறு காரணமாக விமானம் வெடித்திருக்கலாம் அல்லது தீ பற்றி இருக்கலாம் எனற கோணத்தில் திருப்புகிறது. என அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.