இலங்கையின் கிரிக்கட் வீரர்கள் மூவருக்கு விதிக்கப்பட்டுள்ள போட்டித்தடை!!

1098


கிரிக்கட் வீரர்கள்..இங்கிலாந்துக்கான கிரிக்கெட் சுற்றுப் பயணத்தின் போது, பிரித்தானிய கட்டுப்பாடுகளை மீறிய இலங்கை கிரிக்கெட் அணியின் மூன்று வீரர்களுக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களான குசல் மெண்டிஸ் மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகியோருக்கு 2 வருடகால போட்டித்தடையும், நிரோசன் திக்வெல்லவுக்கு 18 மாதகால போட்டித்தடையும் விதிக்கப்பட வேண்டும் என ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் ஒழுக்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது.
அத்துடன், குறித்த மூவருக்கும் 25,000 அமெரிக்க டொலர்கள் அபராதமாக விதிக்கப்பட வேண்டும் எனவும் 5 பேர் அடங்கிய விசாரணைக்குழு பரிந்துரைத்துள்ளது.


இங்கிலாந்துக்கான கிரிக்கெட் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருந்த போது, கட்டாய உயிர்குமிழி நடைமுறையை மீறிச் செயற்பட்டமைக்காக அவர்கள் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்நிலையில் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கான விளக்கங்களை நேற்று அவர்கள் மூவரும் கடிதங்கள் மூலம் ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் ஒழுக்காற்று குழுவிற்கு அறியப்படுத்தி இருந்தனர்.


இதனையடுத்து, இன்று அவர்களுக்கு விடுக்கப்பட்டிருந்த அழைப்புக்கு அமைய குறித்த மூன்று பேரும் ஒழுக்காற்றுக் குழுவில் முன்னிலையாகியிருந்தனர்.