16 மணி நேரம் தொடர்ந்து கணினியில் விளையாடிய சிறுவன் கோமாவில்!!

309

Boy Playsநோர்வேயில் தொடர்ந்து 16 மணி நேரம் கணினி விளையாட்டில் ஈடுபட்டிருந்த சிறுவன் திடீரென்று மயங்கி விழுந்து உயிருக்குப் போராடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து லண்டலிருந்து வெளியாகும் தி லோக்கல் இணைய இதழிலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 14 வயதான ஹென்ரிக் ஈட் என்ற சிறுவன், தனது பள்ளியில் “கால் ஒஃப் டியூட்டி” என்ற கணினி விளையாட்டை தொடர்ந்து 16 மணி நேரம் ஆடியுள்ளான்.

விளையாட்டு ஆர்வத்தில் சுமார் 4 லிட்டர் எனர்ஜி டிரிங்க் எனப்படும் கஃபீன் என்னும் ஊக்கப்பொருள் அடங்கிய பானத்தை அவன் பருகியிருக்கிறான்.

அப்போது, திடீரென்று மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவன், கோமா நிலைக்குச் சென்றதுடன், அவனது சிறுநீரகங்களும் பழுதடையத் தொடங்கின. அவனது இதயம், நுரையீரலும் பாதிப்புக்குள்ளானது.

மரணத்தின் விளிம்பிக்கே சென்றுவிட்ட அவனை, கடுமையான முயற்சிக்குப் பிறகு மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.