அரசாங்க அச்சக கூட்டுத்தாபனத்தில் தீ விபத்து!!

714

Fireஅரசாங்க அச்சக கூட்டுத்தாபன கட்டடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று (26) இரவு அச்சக கூட்டுத்தாபன கட்டடத்தில் உள்ள அறை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் தீ உடனடியாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த தீயின் காரணமாக எந்தவித சேதமும் ஏற்படவில்லை.

தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.