மலேசியாவில் சட்டவிரோதமாக 5000 இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள்!!

519

Flag of Malaysiaமலேசியாவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் சட்டவிரோதமாக தங்கிருப்பதாக தூதரக தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்களில் 600க்கும் மேற்பட்டவர்கள் தொடர்பில் உரிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் ஏனையோர் மலேசியாவில் பல இடங்களில் வசித்து வருவதாகவும் மலேசியாவுக்கான இலங்கை தூதரகத்தின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

தினமும் சுமார் 50 பேர் அடைக்கலம் கோரி இலங்கை தூதரகத்திற்கு வருவதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் பலர் சுற்றுலா வீசா அனுமதியில் அங்கு சென்றவர்கள் எனவும் இவர்கள் சட்டவிரோதமாக அங்கு தொழில் புரிந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.