விபரீத செயலியால் கோழிகளை போல சிக்கிய தோழிகள் : நடந்த விபரீதம்!!

891

ராமநாதபுரம்…

ராமநாதபுரம் மாவட்ட சைபர் குற்றபிரிவு காவல்துறையினரிடம் சமீபத்தில் பெண் ஒருவர் வினோத புகார் ஒன்றை அளித்தார். அதில் தன்னிடமும், தனது தோழிகளிடமும் தங்களுக்கு அறிமுகமான தோழி ஒருவரின் பெயரில் நீண்ட நாட்களாக வாட்ஸ் ஆப்பில் சாட்டிங் செய்து வந்த நபர்,

தனது மற்ற தோழிகளிடம் வாட்ஸ் அப் மூலம் பெற்ற அந்தரங்க தகவல்களை வைத்து மி.ரட்டி பணம் கேட்பதாகவும், தனது திருமணத்துக்கு வாந்திருந்த அந்த தோழி, திருமணமனதே தெரியாதது போல பேசியதால் சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து அந்த தோழியின் வேறொரு செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு பேசிய போது இவ்வளவு நாட்களும் எங்களுடன் அவர் வாட்ஸ் அப்பில் சாட்டிங் செய்யவில்லை என்று கூறியதால் க.டு.மையான அ.தி.ர்ச்சி உண்டனதாகவும்,

இவ்வளவு நாள் தாங்கள் யாரிடம் சாட்டிங் செய்தோம் என்று தெரியவில்லை. அதே நேரத்தில் தோழியின் பெயரில் சாட்டிங்கில் ஈடுபட்ட நபரோ வாட்ஸ் அப்பில் பகிர்ந்த அந்தரங்க புகைப்படங்களை வைத்துக் கொண்டு பணம் கேட்டு மி.ர.ட்டி வருவதாக புகாரில் கூறி இருந்தார்.

இதையடுத்து தோழிபோல பேசிய நபரின் செல்போனை வைத்து விசாரணையை முன்னெடுத்த சைபர் கு.ற்.ற.பி.ரிவு காவல்துறையினர் , அந்தப்பெண் மற்றும் தோழிகளிடம் வாட்ஸ் அப்பில் தோழிபோல சாட்டிங் செய்தது ஒரு ஆண் என்பதை கண்டுபிடித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மேலபுழுதியூர் கிராமத்தை சேர்ந்த அம்பேத்கர் நகரை சேர்ந்த பீம்ராவ் என்பதும் ஏற்கனவே இரு திருமணங்கள் செய்துள்ள இவன் பெ.ண்.களுடன் நெ.ரு.ங்கி பழகி,

அந்தரங்க விவரங்களை தெரிந்து கொண்டு பணம் பறிப்பதற்காக, செல்போன் செயலி ஒன்றின் மூலம் கோழிகளை போல பல தோழிகளை தனது சாட்டிங் வலையில் சிக்க வைத்துள்ளான்.

‘கேர்ள் பிரண்ட சேர்ஜ்’ என்ற செல்போன் செயலி மூலம் அந்த குறிப்பிட்ட பெண்ணின் நம்பரை பெற்ற பீம்ராவ், அந்த பெண்ணின் மூலம் அவரது தோழிகளின் செல்போன் நம்பரை ஒவ்வொன்றாக பெற்று வேறு வேறு பெண்களின் பெயர்களின் வாட்ஸ் அப் சாட்டிங்கில் ஈடுபட்டுள்ளான்.

தோழி என்ற நினைப்பில் தனது குடும்ப சூழ்நிலை மற்றும் அந்தரங்க பிரச்சனைகள் குறித்து மணம் விட்டு பேசிய பெண்களிடம் அவர்களது அந்தரங்க புகைப்படங்களை கேட்டு பெற்ற பீம்ராவ் அதனை கருவியாக வைத்து பணத்துக்காக பெண்களை மிரட்ட தொடங்கி இருக்கின்றான்.

புகார் அளித்த பெண்ணின் செல்போன் நம்பர் எப்படி கேர்ள் பிரண்ட் சேர்ச் என்ற செயலிக்கு சென்றது ? என்று விசாரித்த போது, சில மாதங்களுக்கு முன்பு இலவச விளையட்டு செயலி ஒன்றை தனது செல்போனில் பதிவிறக்கம் செய்த அந்தப்பெண் தனது தொடர்பு எண், மற்றும் செல்போனில் உள்ள விவரங்களை அந்த செயலியின் சர்வர் கையாளலாம் என்று அனுமதி அளித்துள்ளார்.

இதை பயன்படுத்தி அந்த நிறுவனம் டேட்டிங் செயலிகளில் இந்தப்பெண்ணின் நம்பரை பதிவேற்றம் செய்திருக்கலாம் என்று போலீசார் சுட்டிக்கட்டுகின்றனர்.

பீம்ராவை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முன்னதாக பீம்ராவிடம் இருந்த பறிமுதல் செய்யப்பட்ட செல்போனில் உள்ள பெண்களின் அந்தரங்க புகைப்படங்கள் அழிக்கப்பட்டது.

அதே நேரத்தில் அத்தியாவசியம் இல்லாத செல்போன் செயலிகளை பதிவிறக்கம் செய்வதை தவிர்க்க அறிவுருத்தும் போலீசார், முகநூல், வாட்ஸ் அப் போன்ற சமூக வளைதளங்களில் முகம் கட்டாமல் ஆண்கள் மற்றும் பெண்கள் பெயரில்,

தெரிந்தவர்கள் சாட்டிங் செய்யும் நபர்களை நம்பி அந்தரங்க தகவல்களை புகைப்படத்துடன் பகிர்ந்தால் என்ன மாதிரியான விபரீதம் அரங்கேறும் என்று எச்சரிக்கின்றனர்.