நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் ஒன்றாகப் புதைக்கப்பட்ட கல்லறைகள் கண்டுபிடிப்பு!!

258

Muslim

போஸ்னியாவின் மத்தியப் பகுதியில் உள்ள டான்சி வகுப் பகுதியில் உள்ள பெரிய பொதுஜனக் கல்லறை ஒன்று அந்நாட்டுத் தடயவியல் நிபுணர்களால் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இங்கு கடந்த 1990களில் பிரிஜிடர் பகுதியில் நடைபெற்ற சண்டையில் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான முஸ்லிம்களின் பிணங்கள் ஒன்றாகப் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று அரசு அதிகாரி ஒருவர் நேற்று தகவல் அளித்தார்.

இங்கு கிடைத்துள்ள அறிகுறிகளின்படி நூறிலிருந்து 147 பிணங்கள் வரை இங்கு புதைக்கப்பட்டிருக்கக்கூடும் என்று போஸ்னியாவின் காணாமற்போன மக்களுக்கான நிறுவனத்தின் தகவல் தொடர்பாளர் லெஜ்லா செஞ்சிக் தெரிவித்தார்.

1992-1995ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற போரின் தொடக்கத்தில் இறந்த முஸ்லிம் மக்களின் சடலங்கள் இங்கு புதைக்கப்பட்டிருக்கலாம் என்று தாங்கள் நம்புவதாகவும் அவர் கூறினார். குரேஷியர்கள், முஸ்லிம்கள் மற்றும் செர்பியர்களிடையே நடைபெற்ற இந்த போரில் கிட்டத்தட்ட பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கல்லறையில் புதைக்கப்பட்டுள்ள சடலங்களைத் தோண்டியெடுக்கும் பணி விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2013 ஆம் ஆண்டின் இறுதியில் போஸ்னியாவின் வடமேற்குப் பகுதியில் பிரிஜிடருக்கு அருகில் முன்னாளில் சுரங்கமாக செயல்பட்ட இடத்தில் ஒரு பெரிய கல்லறையைத் தடயவியல் நிபுணர்கள் கண்டுபிடித்தனர்.

அப்போது அங்கிருந்து கிட்டத்தட்ட 430 சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டன. அதன் பின்னர் இதுபோன்ற பெரிய பொதுஜனக் கல்லறைகளைக் கண்டுபிடிப்பதென்பது அரிதாகவே இருந்தது என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.