விமான ரகசியங்களை மறைக்கும் மலேசியா : கருத்து வெளியிட்ட விமானி பணிநீக்கம்!!

593

Flight

மலேசிய விமானம் குறித்து மலேசியா எதையோ மறைக்கிறது என்று பேஸ்புக்கில் கருத்து தெரிவித்த மூத்த ஏர் ஏசியா விமானி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 8ம் திகதி மாயமான மலேசிய விமானம் தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் விழுந்துவிட்டதாக மலேசியா கடந்த திங்கட்கிழமை அறிவித்தது. இங்கிலாந்தைச் சேர்ந்த இன்மார்சாட் நிறுவனம் அளித்த தகவலின்படி மலேசியா நாடானது இந்த முடிவுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், கோலாலம்பூரைச் சேர்ந்த ஏர் ஏசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மூத்த விமானி ஒருவர் மலேசிய அரசு கடலுக்குள் விழுந்த விமானம் பற்றிய தகவல்களை மறைப்பதாக பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அந்த விமானி பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது..

கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் பொருட்கள் விமானத்தின் பாகங்கள் என்று இதுவரை உறுதி செய்யப்படவில்லை. முதலில் ஆதாரங்களை காட்டிவிட்டு அதன் பிறகு எம்.ஹெச்.370 விமானம் விபத்துக்குள்ளானது என்று கூறுங்கள். அதுவரை உண்மைகளை மறைக்காதீர்கள்.

மேலும் அரசுக்கு ஏகப்பட்ட விவரங்கள் தெரியும், ஆனால் அதை தெரிவிக்க மறுக்கிறது என்று தெரிவித்துள்ளார். பெயர் தெரிவிக்கப்படாத அந்த மூத்த விமானி மலேசிய அரசு விமானம் குறித்த தகவல்களை மறைப்பதாக தெரிவித்ததால் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.