கொழும்பு நகரில் ஏற்பட்டுள்ள பெரும் ஆபத்து : வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை!!

1302


கொழும்பு நகரில்..



கோவிட் தொற்றின் டெல்டா மாறுபாடு கொழும்பு நகரத்தில் 100 சதவீதம் பரவி வருவதாகவும், மேலும் இந்த விகாரம் மற்ற பகுதிகளுக்கு வேகமாக பரவும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உயிரணு உயிரியல் பிரிவு பேராசிரியர் நீலிகா மாலவிகே மற்றும் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை பிரிவின் பிரதானி வைத்தியர் சந்திம ஜீவந்தர ஆகியோர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.




டெல்டா வகை அல்பா வகையை தாண்டி பரவி வருவதாகவும், நாட்டில் ஒரு புதிய ‘சூப்பர் டெல்டா’ வகை உருவாகி வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


டெல்டா வைரஸால் பாதிக்கப்பட்ட ஐந்து பேர் கடந்த ஜூலை மாதம் தெமட்டகொட பகுதியிலிருந்து முதன்முதலில் கண்டறியப்பட்டனர். அதன் பிறகு டெல்டாவால் பாதிக்கப்பட்ட 292 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இலங்கையில் தடுப்பூசி திட்டம் 80 சதவீத இலக்கை அடைந்தவுடன், செப்டம்பர் இறுதிக்குள் நோயின் சில கட்டுப்பாட்டை எதிர்பார்க்கலாம் என்று வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.


இதேவேளை, டெல்டா ரகமானது மாறிவிட்டது எனவும், தற்போது புதிய வகை பிறழ்வு கொழும்பு நகரத்தில் பரவி வருவதாகவும், இந்த புதிய வகை மற்ற பகுதிகளுக்கும் பரவக் கூடும் என இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் விசேட மருத்துவர் வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.

தற்போது ஒரு மணி நேரத்திற்கு 9 பேர் கோவிட் தொற்றினால் உயிரிழப்பதாகவும், வைத்தியர் பத்மா குணரத்ன குறிப்பிடுகிறார்.
செப்டம்பர் 18 வரை நாடு மூடப்பட்டால் 7,500 உயிர்களை காப்பாற்ற முடியும் என்று உலக சுகாதார அமைப்பு கணித்துள்ளது. அந்த அறிக்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-