வவுனியா சாந்தசோலை கலைவாணி முன்பள்ளிக்கு திரு.க.சந்திரகுலசிங்கம் அவர்களினால் புத்தகப் பைகள் அன்பளிப்பு!!(படங்கள்)

360

கோவில்குள இளைஞர் கழகத்தின் மற்றுமொரு செயற்திட்டமாக இளைஞர் கழக ஸ்தாபகரின் நெறிப்படுத்தலில் வவுனியா சாந்தசோலை கலைவாணி முன்பள்ளிக்கு ஒருதொகை புத்தகபைகள் நேற்று முன்தினம் அன்பளிப்பு செய்யபட்டது.

இவ் நிகழ்வில் கருத்து தெரிவித்த புளொட் அமைப்பின் வன்னிப் பிராந்திய அமைப்பாளரும், மத்திய குழு உறுப்பினருமான திரு.கந்தையா சிவநேசன் (பவன்) அவர்கள் ஆரம்ப கல்வியின் மூலமே சிறந்த கல்விமான்களாக உருவாக முடியும். எனவே மாணவர்களும் பெற்றோர்களும் ஆரம்ப கல்வியில் அக்கறையுடன் செயல்பட வேண்டும் எனவும் , எமது வன்னி பிரதேசத்தில் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவேண்டும் எனும் நோக்கில் செயல்பட்டுவரும் எமது கோவில்குளம் இளைஞர் கழகம் தொடர்ந்தும் அதன் செயற்பாடுகளை விஸ்தரிப்பதில் பெருமிதம் கொள்கிறேன் எனவும் தெரிவித்தார்.

இவ் நிகழ்வில் கருத்து தெரிவித்த புளொட் முக்கியஸ்தரும், முன்னாள் வவுனியா உப நகரபிதாவும், கோயில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகருமான க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள், வவுனியாவில் எமது கழகத்தின் பாரிய நலனுதவி செயற்திட்டங்கள் பல கட்டங்களாக நடைபெற்று வரும் வேளையில் இவ்வாறன உதவிகளும் கோரப்பட்டவண்ணம் உள்ளதால் எமது கழகம் அதனையும் கருத்தில் கொண்டு செயற்பட்டவண்ணம் உள்ளது. சிறு பராயத்தில் எமது மாணவர்கள் நல்லதோர் கல்வியும் ஒழுக்கமும் கற்று சமூகத்தில் சிறந்து விளங்கவேண்டும். எனவே பெற்றோர்கள் எமது சிறார்களின் ஆரம்ப கல்வியில் அதிக அக்கறை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இவ் நிகழ்வில் புளொட் அமைப்பின் வன்னிப் பிராந்திய அமைப்பாளரும், மத்திய குழு உறுப்பினருமான திரு.கந்தையா சிவநேசன் (பவன்), புளொட் முக்கியஸ்தரும், முன்னாள் வவுனியா உப நகரபிதாவும், கோயில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகருமான க.சந்திரகுலசிங்கம்(மோகன்), , புளொட் முக்கியஸ்தரும் கோயில்குளம் இளைஞர் கழக ஆலோசகருமான கண்ணதாசன், கோவில்குளம் இளைஞர் கழக இணைப்பாளர் காண்டீபன், கோவில்குளம் இளைஞர் கழக தொழில்நுட்ப இயக்குனர் சதீஸ் மற்றும் நிகேதன், சாந்தசோலை மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவி எஸ்.பவனாதேவி, முன்பள்ளி ஆசிரியை என்.குமுதினி மற்றும் பொதுமக்கள் மாணவர்கள் என பெருமளவானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

33 34 35 36 37