மீண்டும் நீடிக்கப்பட்ட ஊரடங்கு : சற்றுமுன் வெளியான புதிய அறிவிப்பு!!

2578

மீண்டும் நீடிக்கப்பட்ட ஊரடங்கு..

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவானது மேலும் நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த விடயத்தை இலங்கையின் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தனது டுவிட்டர் பக்கத்தின் ஊடாக தெரியப்படுத்தியுள்ளார்.

நாட்டில் கோவிட் தொற்று நிலை தீவிரமடைந்ததையடுத்து கடந்த 20 ஆம் திகதி முதல் நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கானது அமுல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் தொடர்ச்சியாக ஊரடங்கு நீடிக்கப்பட்டு எதிர்வரும் 13ஆம் திகதி அதிகாலை நான்கு மணி வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கானது அமுல்படுத்தப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இவ்வாறான சந்தர்ப்பதிலேயே தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்பான குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முந்தைய செய்தி  : இலங்கையின் முடக்கநிலை கட்டுப்பாடுகள் தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல்!!

நாடு திறக்கப்பட்டாலும் தீவிர கட்டுப்பாடுகள் நீடிக்கும் என சுகாதார பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நீடிப்பதா இல்லையா என்பது தொடர்பில் இன்று தீர்மானங்கள் அறிவிக்கப்படும்.

அதற்கமைய இன்றைய தீர்மானத்தில் நாடு திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டாலும் கட்டுப்பாடுகளின் கீழ் திறக்கப்படும்.
தொடர்ந்து கட்டுப்பாட்டு சட்டங்களை அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும்.

அத்துடன் ஹம்பாந்தோட்டைக்கு பைசர் தடுப்பூசி வழங்குவதற்கு அரசாங்கமே தீர்மானம் எடுத்துள்ளதென சுகாதார பணிப்பாளர் அசேல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-