நீடிக்கப்பட்டுள்ள ஊரடங்கு : நாட்டு மக்களுக்கு சுகாதார அமைச்சர் வெளியிட்ட முக்கிய செய்தி!!

1564

நீடிக்கப்பட்டுள்ள ஊரடங்கு..

தற்போது அமுல்படுத்தப்பட்டிருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலப்பகுதியை பயன்படுத்தி இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் தங்களுக்கான தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பொது மக்களிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

எதிர்வரும் 13ஆம் திகதி வரை அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவினை எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிப்பதாக அரசாங்கம் இன்று அறிவித்தது.

இந்த நிலையிலேயே சுகாதார அமைச்சர் பொதுமக்களிடம் குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். மேலும், எதிர்காலத்தில் கோவிட் நோயாளர்களின் எண்ணிக்கை குறையும் போது நாட்டை முழுமையாக திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.’

எனவே, இந்த ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி இதுவரையில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் செலுத்திக் கொள்ளுமாறும், முகக்கவசம் அணிவதோடு, வீடுகளிலே இருக்குமாறும் சுகாதார அமைச்சர் நாட்டு மக்களிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.