வவுனியா மண்ணில் தடைகளைத் தாண்டி சரித்திரம் படைத்த தமிழ் மாமன்றம்!!(படங்கள்)

360

இளம் கலை-இலக்கிய ஆர்வலர்களின் ஒன்றிணைவில் கடந்த வருட நடுப்பகுதியில் உருவாக்கப்பட்டு, வவுனியா மாவட்டத்தில் கலை இலக்கிய ரீதியிலான தொடர்ச்சியான பணிகளை சிறப்பாக செய்து வருகின்ற, தமிழ் மாமன்றம், தனது முதலாவது பொது விழவான “இயல் விழா 2014″ நேற்று (30.03) வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடந்து முடித்து.

இரு அமர்வுகளாக நடைபெற்ற இன் நிகழ்வுகளில் முதல் அமர்வு காலை 8.30 தொடக்கம் 1 மணி வரையும், மாலை அமர்வுகள் 4.30 தொடக்கம் 9 மணிவரையும் நடைபெற்றது. இன் நிகழ்வுகள் அனைத்தும் வவுனியா நெற் இணையத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ் விழாவில், உலக அளவில் பிரசித்தி பெற்ற சிறந்த பேச்சாளரும், அகில இலங்கை கம்பன் கழகத்தினுடைய ஸ்தாபகருமான, கம்பவாரிதி இ.ஜெயராஜ் ஐயா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

மேலும் கௌரவ விருந்தினராக வடமாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர்களான திரு.இந்திரராசா, திரு.தியாகராஜா, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளரரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான திரு.ஆனந்தசங்கரி, ஜனாதிபதியின் இணைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான
திரு.சிவநாதன் கிஷோர், வவுனியா பிரதேச செயலாளர் திரு.கா.உதயராசா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராஜ குகனேஸ்வரன், வவுனியா நகரசபையின் முன்னாள் நகரபிதா திரு.சந்திரகுலசிங்கம்(மோகன்),

வவுனியா வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் திரு.அகிலேந்திரன், வவுனியா மாவட்ட நீதிபதி திரு.இராமக்கமலன், யாழ். மாவட்ட நீதிபதி அமலவளன், வவுனியா கல்வியல் கல்லூரியின் பிடாதிபதி, துணைப் பீடாதிபதி, வவுனியா நகரசபைச் செயலாளர், வரியிறுப்பாளர் சங்கத் தலைவர், கூட்டுறவு சங்கத் தலைவர் திரு.சுப்ரமணியம், வர்த்தக சங்கத் தலைவர்,

யாழ் வலம்புரி ஆசிரியர் திரு.ந.விஜயசுந்தரம், இரா.செல்வவடிவேல், கலாநிதி ஸ்ரீ.பிரசாந்தன் மற்றும் பல பிரதேச முக்கியஸ்தர்கள், கல்வியாளர்கள், பாடசாலை மாணவர்கள், பிரதேச மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

வவுனியா மண்ணில் அதிகளவான பிரமுகர்களும், முக்கியஸ்தர்களும் கலந்துகொண்ட பெரும் நிகழ்வாக இயல் விழா இடம்பெற்றமை சிறப்பம்சமாகும்.

மேலும் இவ் விழாவினை ஏற்பாடு செய்ய ஆரம்பித்ததில் இருந்து பல்வேறு தடைகளுக்கும் பிரச்சனைகளுக்கும் முகம் கொடுத்த விழாக் குழுவினர் தடைகளைத் தாண்டி சரித்திரம் படைத்துள்ளனர் என்றால் அது மிகையாகாது.

இவ் விழாவினை சிறப்பாக ஒழுங்கமைத்து நடாத்தி முடித்த விழாக் குழுவினருக்கு வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

1 2 4 5 6 7 9p