இலங்கையில் சிறுவர்களை தாக்கும் கறுப்பு பூஞ்சை நோய் தொடர்பில் எச்சரிக்கை!!

925

கறுப்பு பூஞ்சை..

இலங்கையில் நாட்பட்ட நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ள, நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த சிறுவர்களை கருப்பு பூஞ்சை நோய் தாக்குவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனால் சிறுவர்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு விசேட வைத்தியர் பிரிமாலி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்றாளர்களுக்குள் சிறுவர்களுக்கு இதுவரையில் கருப்பு பூஞ்சை தொற்றியதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் சிறுவர்களை கருப்பு பூஞ்சை தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொவிட் தொற்றினால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும். இதன் போது இதன் அறிகுறிகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அதற்கமைய, கருப்பு பூஞ்சை பாதித்து விட்டால் முதலில் முகம் வீங்கும், காய்ச்சல் ஏற்படும், தலைவலி, மூக்கின் உட்புறத்தில் கருப்பு நிறத்தில் காணப்படும் போன்ற அறிகுறிகள் தென்படும்.

இதனை கவனிக்காமல் விட்டால் கண்களை பாதிக்கும். கண்களை பாதித்து விட்டால் பார்வையில்லாமல் போய்விடும். பார்வையில்லாமல் போய்விட்டால் அதன் பின்னர் எவ்வளவு சிகிச்சையளித்தாலும் மீளவும் இழந்த பார்வையை மீள பெற முடியாது.

அவ்வாறான நோய் அறிகுறிகள் கொண்ட சிறுவர்கள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைக்கு அழைத்து செல்லுங்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.