வவுனியாவில் மிகவும் பின்தங்கிய பாடசாலையான அருவித்தோட்டம் சிவானந்தா வித்தியாலயம் இரண்டாம் இடம்பெற்று வரலாற்று சாதனை!!

2499

அருவித்தோட்டம் சிவானந்தா வித்தியாலயம்..

வவுனியா தெற்கு வலயத்தில் அருவித்தோட்டம் சிவானந்தா வித்தியாலயத்தில் 36 மாணவர்கள் உயர்தரம் கற்க தகுதி பெற்றுள்ளதுடன், 90 வீத சித்தியை பெற்று வலயத்தில் இரண்டாம் நிலை பெற்று சாதனை படைத்துள்ளது.

வவுனியா தெற்கு வயலத்தின் செட்டிகுளம் கோட்டத்தில் அமைந்துள்ள கஸ்ரப் பிரதேச பாடசாலையான அருவித்தோட்டம் சிவானந்தா வித்தியாலயத்தில் இம்முறை 40 பேர் க.பொ.த.சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். அதில் 36 மாணவர்கள் கணித பாடாத்துடன் கூடியதாக சித்தி பெற்று உயர்தரம் கற்க தகுதி பெற்றுள்ளனர்.

வவுனியா தெற்கு வலயத்தில் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி சித்தி வீதத்தில் முதல் நிலையில் உள்ளதுடன், பினதங்கிய பாடசாலையான அருவித்தோட்டம் சிவானந்தா வித்தியாலயம் அதிபர் பி.கேமலதன் அவர்களின் வழிகாட்டலில் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பான சேவையூடாக 90 வீத சித்தியைப் பெற்று வலயத்தில் இரண்டாம் நிலையைப் பெற்றுள்ளது.

அத்துடன், பின்தங்கிய குறித்த பாடசாலையானது கத்தோலிக்கம், தமிழ், புவியியல், சித்திரம் உள்ளிட்ட 5 பாடங்களில் 100 வீத சித்தியையும், சைவசமயம், விஞ்ஞானம், குடியுரிமைக்கல்வி, சுகாதாரமும் உடற்கல்வியும் ஆகிய பாடங்களிர் 90 வீதத்திற்கு மேற்பட்ட சித்தி வீதத்தையும் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.