ஓடுதளத்தை விட்டு விலகி புல்தரையில் சிக்கிய பயணிகள் விமானம்!!

619


பயணிகள் விமானம்..


நேபாள தலைநகர் காத்மண்டு விமான நிலையத்திலிருந்து நேபாள்கஞ்ச் பகுதிக்கு இன்று காலை ஸ்ரீஏர்லைன்ஸ் என்ற பயணிகள் விமானம் புறப்படுவதாக இருந்தது. பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்படுவதற்கான ஓடுதளத்திற்கு விமானம் வந்தபோது எதிர்பாராத விதமாக ஓடுதளத்தை விட்டு விலகி புல்தரையில் சிக்கிக்கொண்டது.விமானத்தின் இடதுபக்க டையர் ஓடுதளத்தை விட்டு விலகி அருகிலிருந்த புல்தரையில் சிக்கிக்கொண்டது. இந்த சம்பவத்தால் விமானத்திலிருந்த பயணிகள் சற்று பதற்றமடைந்தனர்.


உடனடியாக அங்கு விரைந்த விமானநிலைய ஊழியர்கள் பயணிகளை விமானத்திலிருந்து பாதுகாப்பாக மீட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.