வவுனியாவில் காணாமல் போன மாணவன் கண்டுபிடிப்பு!!

2749

கண்டுபிடிப்பு..

வவுனியாவில் காணாமல் போனதாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்ட 17 வயது மாணவன் புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று (08.10) கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, தோணிக்கல் பகுதியில் வசித்து வந்த மணிவண்ணன் சிவானுஜன் என்ற 17 வயது மாணவன் நேற்று (07.10) காலை வீட்டில் இருந்து சென்ற நிலையில் காணவில்லை என மாணவனின் தந்தையால் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த முறைப்பாடு தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். இந்நிலையில் குறித்த மாணவன் புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள பேரூந்து நிலையத்தில் நிற்பதாக மாணவனின் நண்பனுக்கு முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் மூலம் தெரிவிக்கப்பட்டதையடுத்து, மாணவனின் பெற்றோருக்கு குறித்த தகவல் தெரியப்படுத்தப்பட்டது.


அத்துடன், குறித்த முகச்சக்கர வண்டி சாரதி மாணவன் வீட்டில் இருந்து முரண்பட்டுக் கொண்டு வந்துள்ளதாக அறிந்த நிலையில், மாணவனை புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

அங்கு சென்ற மாணவனின் பெற்றோர், புதுக்குடியிருப்பு பொலிசாரினால் மேற்கொள்ள விசாரணைகளையடுத்து மாணவனை பொறுப்பேற்றுக் கொண்டதுடன், இது தொடர்பில் வவுனியா பொலிசாருக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.