வவுனியா மாவட்டத்தில் முதல் கட்டமாக 85 பாடசாலைகள் நாளை மீளத் திறப்பு: கு.திலீபன் எம்.பி!!

1757

பாடசாலைகள்..

வவுனியா மாவட்டத்தில் முதல் கட்டமாக 85 பாடசாலைகள் நாளை (21.10) முதல் மீளத் திறக்கப்படவுள்ளதாக மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளை மீளத் திறத்தல் தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை கட்டம் கட்டமாக மீறத் திறப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதனடிப்படையில் 200 குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் முதல் கட்டமாக திறக்கப்படவுள்ளன. அதனடிப்படையில் வவுனியா வடக்கு, வவுனியா தெற்கு வலயங்களுக்கு உட்பட்ட 85 பாடசாலைகள் முதல் கட்டமாக திறக்கப்படவுள்ளன.

உரிய சுகாதார முன்னேற்பாடுகளுடன் அவை திறக்கப்படவுள்ளன. குறிதத பாடசாலைகளினை மீள திறப்பதற்கு அப்பகுதி கிராம அலுவலர், சுகாதார பிரிவினர், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கின்றோம் எனத் தெரிவித்தார்.