இளம் பெண்ணுக்கு காதலனால் நடந்த கொடுமை : காவல் நிலையத்தில் காதலி எடுத்த விபரீத முடிவு!!

1043


பல்லடம் அருகே திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய காதலன் கைவிட்ட நிலையில் காவல் துறையினரும் நடவடிக்கை எடுக்க தாமதமானதால் பட்டதாரி பெண் காவல் நிலைய வளாகத்தில் வி.ஷ.ம் அருந்திய ச.ம்.பவம் பெரும் ப.ர.பரப்பை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த வெள்ளநத்தம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகள் திவ்யா. பட்டதாரியான இவர் வீட்டில் இருந்து கொண்டு வேலைக்கு முயற்சி செ.ய்.து கொண்டிருந்தார்.

இந்நிலையில் இவரது பெற்றோர் இவருக்கு திருமணம் செய்து வைக்க வரன் தேடி வந்தனர்.



இந்நிலையில் இவரது உறவினரான எல்லப்பாளையம் புதூரை சேர்ந்த வசந்தா என்பவர் பழனிச்சாமியிடம் தனது மகன் பார்த்திபனுக்கு அவரது பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார்.



இதனை அடுத்து இருவருக்கும் திருமணம் செ.ய்து வைக்க பெரியவர்கள் முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து பார்த்திபன் அ.டி.க்கடி தொலைபேசி மூலம் திவ்யாவுடன் பேசி பழகி வந்துள்ளார்.


இருவரும் அ.டி.க்கடி தனிமையில் சந்தித்து வந்ததாககவும் கூறப்படுகிறது. இருவரும் தனிமையில் இருக்கும் பொழுது கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வதாக கூறி பார்த்திபன் திவ்யாவை பலமுறை கட்டாயப்படுத்தி பா.லி.ய.ல் வ.ன்.பு.ண.ர்வு செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் திவ்யா கர்ப்பமான நிலையில் இது குறித்து பார்த்திபனிடம் கூறியதை அடுத்து காங்கயத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு திவ்யாவை அழைத்து சென்ற பார்த்திபன் அங்கு பரிசோதனை செய்து கர்ப்பம் கலைக்க மாத்திரைகள் வாங்கி குடுத்துள்ளார்.


மாத்திரைகளை சாப்பிட திவ்யாவை வ.ற்.பு.று.த்திய பார்த்திபன் கர்ப்பம் கலைந்தவுடன் பெற்றோருடன் வந்து உடனடியாக திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார்.

இதனை நம்பிய திவ்யா மாத்திரைகளை சாப்பிட்டதால் கர்ப்பம் கலைந்துள்ளது. இந்நிலையில் திவ்யாவின் வீட்டிற்கு வந்த பார்த்திபனின் பெற்றோர்கள் ஜாதக பொருத்தம் சரியில்லாத காரணத்தால் திருமணம் வேண்டாம் என கூறியுள்ளனர்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த திவ்யா பார்த்திபன் கட்டாயப்படுத்தி பா.லி.ய.ல் உ.ற.வு கொண்டதும், அதனால் கர்ப்பமடைந்த நிலையில் காங்கயத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று கருவை கலைத்ததையும் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

மேலும் பார்த்திபன் வேறு ஒரு பெண்ணை காதலித்ததும் அவருடன் திருமணம் செய்ய ஏற்பாடு நடந்து வந்ததும் தெரியவந்தது.


இதனை அடுத்து பல்லடம் மகளிர் காவல் நிலையத்தில் திவ்யா இது குறித்து புகார் தெரிவித்துள்ளார். புகாரினை பெற்று கொண்ட காவல் துறையினர் முறையாக நடவடிக்கை எடுக்காமல் திவ்யாவை கடந்த சில நாட்களாக அழைக்களித்ததாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த திவ்யா இன்று காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு வந்த நிலையில் மகளிர் காவல் நிலைய வளாகத்திலேயே வி.ஷ.ம் அருந்தியுள்ளார்.

இதனை அடுத்து அவரை மீட்ட காவல் துறையினர் சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்து அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.