இலங்கையில் திடீரென அதிகரிக்கும் கொவிட் மரணங்கள் : சுகாதார அமைச்சு எச்சரிக்கை!!

1505


கொவிட்..



இலங்கையில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது. இந்த விடயத்தை சாதாரண கருத முடியாதென பிரதி சுகாதார பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் (Hemantha Herath) தெரிவித்துள்ளார்.



கொவிட் தொற்றாளர்களின் அதிகரிப்பினால் இந்த மரணங்கள் அதிகரித்துள்ளதா என ஆராய்ந்து பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மரணங்கள் அதிகரிப்பு குறித்து இந்த நேரத்தில் நிலையான அறிவிப்பு ஒன்றை தற்போதே வெளியிட முடியாதென அவர் கூறியுள்ளார்.




இது தொடர்பில் சுகாதார பிரிவினர் கலந்துரையாடல் மேற்கொள்வது முக்கியம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மரணம் தொடர்பில் தொற்று நோய் விஞ்ஞான பிரிவினர் ஆய்வு நடத்தி அறிக்கை ஒன்றை வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.


எங்களுக்கு தெரியாமலேயே கொவிட் தொற்று அதிகரிப்பு ஒன்று ஏற்பட்டுள்ளதா என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக விசேட வைத்தியர் தெரிவித்துள்ளார். இந்த நிலைமை காரணமாக அனைவரும் அதிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-