வேதனையில் முடிந்த சாதனை முயற்சி : பாரசூட் விரியாததால் பெண் பலி!!

292

Saathani

கின்னஸ் சாதனை முயற்சிக்காக 222 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் ‘ஸ்கை டைவிங்’ (பூமிக்கு மேலே மிதந்தபடி மெதுவாக வந்து தரையை அடைவது) சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை அமெரிக்காவின் அரிசோனா பகுதியில் நடைபெற்றது.

அமெரிக்காவின் தென்மேற்கு பகுதியில் உள்ள அரிசோனா நகரின் மேலே பறந்த விமானத்தில் இருந்து 28 நாடுகளை சேர்ந்த 222 பேர் இந்த முயற்சிக்காக கீழே குதித்தனர்.

அப்போது, டயானா பாரிஸ் என்பவரது பாராசூட்களில் ஒன்று விரியாமல் போனதால், பூமியை நோக்கி வேகமாக விழத் தொடங்கிய அவர், அரிசோனாவின் எலாய் என்ற பகுதியில் தரையில் மோதி பரிதாபமாக பலியானார்.

ஜேர்மனி நாட்டின் தலைநகர் பெர்லினை சேர்ந்த டயானா பாரிஸ்(46), இதுவரை ஆயிரத்து 500க்கும் அதிகமான ஸ்கை டைவிங் நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருப்பதாக அவரது கணவர் சோகத்துடன் தெரிவித்தார்.

தங்களது குழுவின் நண்பரை இழந்து விட்டமைக்காக மிகவும் வருந்தும் கின்னஸ் முயற்சி குழுவினர், டயானாவின் இடத்தை யாரும் ஈடு செய்ய முடியாது. அவரது எதிர்பாராத மரணம் எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு பதிலாக யாரையும் இந்த குழுவில் இணைக்காமல் 221 பேருடன் எங்கள் சாதனை முயற்சி தொடரும் என்று தெரிவித்தனர்.