டைட்டானிக் மூழ்கிய நாளன்று பயணி எழுதிய கடைசி கடிதம் ஏலத்தில்!!

316

Titanic

டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கி விபத்திற்குள்ளான நாளன்று எழுதப்பட்ட கடிதம் விரைவில் ஏலத்தில் விடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுளளது.

டைட்டானிக் என்ற சொகுசு கப்பல் நடுக்கடலில் ஒரு பெரிய பனிப்பாறையில் மோதி விபத்திற்குள்ளானதில் சுமார் 1500 பேர் கடலில் மூழ்கி பலியாயினர்.

மிக மோசமான கடல் விபத்தாக வரலாற்றில் பதிவான மறக்க முடியாத இந்த நிகழ்வு நடந்த நாளன்று அக்கப்பலில் பயணித்த பயணி எழுதிய கடிதம் ஏலத்தில் விடப்படவுள்ளது.

Henry Aldridge and Son என்னும் ஏல நிறுவனம் மேற்கொள்ளும் இந்த முயற்சியில், டைட்டானிக் மூழ்கிய போது அதிலிருந்து அவரது மகளோடு தப்பித்த எஸ்தர் ஹார்ட் என்னும் பெண் எழுதிய கடிதம் ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி ஏலம் விடப்படுகிறது.

டைட்டானிக் கப்பலில் இருந்த பல வரலாற்று சிறப்புமிக்க பொருட்கள் ஏலம் விடப்படும் போது அதிக மதிப்பிற்கு விலைப்போவது உண்டு. அதன்படி, கடலில் டைட்டானிக் மூழ்கிய நாளன்று அன்று காலை நடந்த நிகழ்ச்சியில் தனது மகள் மிக அருமையாக பாடியதாக எஸ்தர் ஹார்ட் என்னும் பெண் எழுதிய கடிதம் கிடைத்துள்ளது.

மூழ்கிய கப்பலில் இருந்து 7 வயது மகள் எவாவுடன் தப்பித்த எஸ்தருக்கு, அவரது கணவரின் கோட்டிலிருந்து இந்த கடிதம் கிடைத்துள்ளது. 1996 ஆம் ஆண்டு அவருடைய 91 வது உயிரிழந்த எஸ்தர் இந்த கடிதத்தை அவரது மகள் எவாவிடம் ஒப்படைத்துள்ளார்.

வரலாற்று சிறப்புமிக்க இக்கடிதம் அதிக மதிப்பிற்கு விலைப்போகுமென எதிர்ப்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.