வவுனியா ஒமந்தையில் டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணி முன்னெடுப்பு!!

708

டெங்கு ஒழிப்பு..

வவுனியா ஒமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டத்தில் பொது சுகாதார பரிசோதகர் எம்.ரஞ்சன் தலைமையில் விசேட டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மாவட்டத்தில் கோவிட் -19 தொற்று தற்போது சற்று குறைவடைந்து வருகின்ற இந்நிலையில் டெங்கு நோயின் தாக்கம் மறுபக்கத்தில் அதிகரித்து வருகின்றது.

அதனையடுத்து ஒமந்தை பொது சுகாதார பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட அரச ஊழியர் வீட்டுத்திட்டம் பகுதியில் அப்பகுதி மக்களின் ஒத்துழைப்புடன் டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் இடம்பெற்றிருந்தது.

டெங்கு நுளம்பு பெருகின்ற இடங்கள் அடையாளம் காணப்பட்டால் உடனடியாக அதனை சுத்தம் செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் வாரங்களில் டெங்கு நுளம்பு பெருகும் வகையில் காணப்படும் இடங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.