
2014ஆம் ஆண்டு பங்களாதேஸில் இடம்பெற்ற த20 உலக கிண்ணப்போட்டியில் கிண்ணத்தை வென்ற இலங்கை அணி இன்று நாடு திரும்புகிறது.
இந்தநிலையில் இலங்கை அணியை வரவேற்பதற்காக ஸ்ரீலங்கா கிரிக்கட் ஏற்பாடுகளை செய்துள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து திறந்த ஜீப் வண்டியில் இலங்கை கிரிக்கட் வீரர்கள் அழைத்துச்செல்லப்படவுள்ளனர்
இதன்போது பொதுமக்கள் தமது வாழ்த்துக்களை அவர்களுடன் பரிமாறிக்கொள்ளலாம் என்று ஸ்ரீலங்கா கிரிக்கட் அறிவித்துள்ளது
இதற்கிடையில் இலங்கை கிரிக்கட் அணிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தொலைபேசியின் ஊடாக தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இலங்கை வீரர்கள் நாட்டுக்கு கீர்த்தியை ஏற்படுத்தியுள்ளார்கள் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்
இதேவேளை இந்திய அணியின் தோல்விக்கு யுவ்ராஜ் சிங்கின் மெதுவான துடுப்பாட்டமே காரணம் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 21 பந்துகளை சந்தித்த அவர் 11 ஓட்டங்களை பெற்றார்
எனினும் இதனை இந்திய அணியின் தலைவர் மஹேந்திரசிங் டோணியும் யுவ்ராஜின் தந்தையான யோகராஜூம் நிராகரித்துள்ளனர். யுவராஜின் நிலை அனைத்து வீரர்களுக்கு ஏற்படக்கூடும் என்று டோணி குறிப்பிட்டுள்ளார்.




