வவுனியாவில் தொடரும் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவங்கள் : பொலிசார் தீவிர விசாரணை!!

2224


எரிவாயு அடுப்பு..வவுனியா மாவட்டத்தில் ஈரற்பெரியகுளம், செட்டிகுளம் மற்றும் மூன்றாவது சம்பவமாக நகரில் நேற்றையதினமும் (06.12.2021) எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவமொன்று பதிவாகியிருந்தது.வவுனியா சிந்தாமணிப் பிள்ளையார் கோவில் வீதியில் உள்ள வீடு ஒன்றில் பெண் ஒருவர் இரவு சாப்பாடு சமைத்துக் கொண்டிருந்த போது எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.
குறித்த பெண் காஸ் சிலிண்டர் அண்மைக்காலமாக வெடிப்பதால் அவதானமாகவும் முன் எச்சரிக்கையுடனும் இருந்தமையால் உடனடியாக சிலிண்டரை நிறுத்திவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார். குறித்த வெடிப்பின் போது எரிவாயு அடுப்பு உடைந்து சேதமாகியிருந்தது.


இச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.ஆர்.மானவடு தலமையிலான பொலிஸ் குழுவினரினால் இன்றையதினம் வீட்டாரிடம் விசாரணைகள் முன்னெடுத்திருந்ததுடன் வெடிப்பு சம்பவம் தொடர்பிலான அறிக்கை தயாரிக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.