பிடித்த ஜாக்கெட் தைத்து கொடுக்காததால் விரக்தியடைந்த பெண் எடுத்த விபரீத முடிவு!!

656


ஹைதராபாத்..ஹைதராபாத் அம்பர்பெட் கோல் நாகா திருமலை நகரை சேர்ந்தவர் தையல் தொழிலாளி ஸ்ரீநிவாஸ். இவரது மனைவி விஜயலட்சுமி. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.மனைவி விஜயலட்சுமிக்கு கணவர் ஸ்ரீநிவாஸ் தான் ஜாக்கெட்டுகள் தைத்துக் கொடுத்து வந்துள்ளார். அதன்படி விஜயலட்சுமிக்கு அவரது கணவர் ஜாக்கெட் ஒன்று தைத்து கொடுத்துள்ளார்.
அது அவருக்குப் பிடிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் வேறு ஜாக்கெட் தைத்து தருமாறு கணவரிடம் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு ம.றுப்பு தெரிவித்த கணவர் ஸ்ரீநிவாஸ் உனக்கு பிடித்தது போல் வேண்டுமானால் நீயே தைத்துக்கொள் என்று கூறியதாக தெரிகிறது.


இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ஸ்ரீநிவாஸ் கோபத்தில் வீட்டை விட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த விஜயலட்சுமி விரக்தியில் படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  வீட்டிற்கு திரும்பிய ஸ்ரீநிவாஸ் படுக்கை அறையின் கதவு மூடப்பட்டிருந்ததால்,


கதவை உடைத்து பார்த்தபோது மனைவி விஜயலட்சுமி தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விஜயலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வ.ழ.க்.குப்பதிவு செய்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் விஜயலட்சுமி, ஜாக்கெட் தைத்து கொடுக்காததால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.