வீட்டுக்குள் தாய் மற்றும் மகளுக்கு அரங்கேறிய பயங்கரம்!!

1228

இராமநாதபுரம்..

மண்டபம் ரயில்வே காலனியைச் சேர்ந்த காளியம்மாள் ரயில்வேயில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்தார். கணவர் இறந்துவிட்ட நிலையில், மூத்த மகள் திருமணம் செய்துகொண்டு மதுரையிலும் இளைய மகள் மணிமேகலை தாயுடனும் வசித்து வந்தனர்.

செவ்வாய்க்கிழமை காலை உட்பக்கமாக தாழிடப்பட்ட வீட்டுக்குள் காளியம்மாளும் மணிமேகலையும் எரிந்து கருகிய நிலையில் சடலங்களாகக் கிடந்துள்ளனர்.

மணிமேகலைக்கு 33 வயதாகியும் திருமணத்துக்கு வரன் அமையாத விரக்தியில் காளியம்மாள் இருந்ததார் என்று கூறப்படுகிறது. எனவே மன உளைச்சலில் தற்கொலை செய்து.கொண்டனரா அல்லது கொலையா என விசாரணை நடைபெற்று வருகிறது.