ஆசிய நாடுகளில் செல்வாக்குமிக்க 100 தலைவர்களில் மகிந்த ராஜபக்ச 34வது இடத்தில்!!

567

Mahinda

2014ம் ஆண்டில் ஆசிய நாடுகளில் செல்வாக்கு மிகுந்த தலைவர்களின் 100 பேர் பட்டியலில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 34வது இடத்தை பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆசியன் அவார்ட்ஸ் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் தலைசிறந்த 100 ஆசியர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பட்டியல் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.

இப்பட்டியில், முதலிடத்தை சீன அதிபர் சீ ஜின்பிங்கும் இரண்டாமிடத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் பிடித்துள்ளனர்.

இவர்கள் தவிர பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி 4வது இடத்தையும், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி 5வது இடத்தையும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் 6வது இடத்தையும் ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் பான் கி மூன் 8வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

மேலும் இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் 11வது இடம், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி 19வது இடம், தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி 21வது இடம், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா 22வது இடம், லக்ஷ்மி மிட்டல் 36வது இடம், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 44வது இடம், சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே 46வது இடம், பொருளியல் அறிஞர் அமர்த்திய சென் 52வது இடம், ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன் 63, தமிழ் திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் 66வது இடம், நடிகர் அமீர்கான் 68வது இடம், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் 76வது இடம், நடிகை ஐஸ்வர்யா ராய் 84வது இடம், நடிகர் சல்மான் கான் 98வது இடம், கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி 99வது இடத்தையும் பிடித்துள்ளனர்.